முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
போலி மருத்துவர் கைது
By DIN | Published On : 24th October 2019 05:15 AM | Last Updated : 24th October 2019 05:15 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கடம்பத்தூரில் மருத்துவம் படிக்காத நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் மருத்துவ அதிகாரிகள் கடம்பத்தூரில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கஜேந்திரபாபு மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து துணை இயக்குநர் இளங்கோவன் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஜேந்திரபாபுவைக் கைது செய்தனர்.