"நெகிழிப் பொருள்களை இருப்பு வைத்தால் அபராதம் விதிக்கப்படும்'

திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியும்

திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, இருப்பு வைத்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சிகளில் நெகிழி உற்பத்தி, இருப்பு மற்றும் உபயோகப்படுத்துவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் மீறி நெகிழிப் பொருள்கள் வைத்திருப்பது கண்டறிந்தால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல் ஆகியவற்றுக்கு முதல் முறையாக ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 
அதேபோல் ஜவுளி கடை, துணிக்கடை, பல்பொருள் அங்காடி, பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் போன்ற பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் விநியோகித்தால் முதல் முறை ரூ. 10 ஆயிரம், 2-ஆவது முறையாக ரூ.15 ஆயிரம், 3-ஆவது முறையாக ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.  அதேபோல், மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் முதல் முறையாக ரூ. ஆயிரமும், 2-ஆவது முறையாக ரூ. 2 ஆயிரமும், 3-ஆவது முறையாக ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும், சிறு வியாபாரிகளுக்கு முதல் மறையாக ரூ. 100, 2-ஆவது முறையாக ரூ. 200, 3-ஆவது முறையாக ரூ. 500 ஆகவும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com