சுடச்சுட

  

  வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் சத்தான உணவு உள்கொள்வது மற்றும் வீட்டுக்கு வீடு ஊட்டச்சத்து உணவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சிப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 
  திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், போஷன் அபியான் என்ற ஊட்டச்சத்து திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  அதேபோல், நிகழாண்டிலும் சிறப்பிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக "வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு' என்ற தலைப்பில் அனைத்து அங்கன்வாடிகள் உள்ள கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  இதன் மூலம் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரத்த சோகை, வயிற்றுப்போக்கு, தன்சுத்தம் மற்றும் கை கழுவும் முறைகள், ஊட்டச்சத்து முறைகள் ஆகிய 5 தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 
  அதன் அடிப்படையில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், உறுதி மொழி ஏற்றல், மனிதச் சங்கிலி மற்றும் நடைப்பயணம் போன்ற செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
  எனவே சிறப்பாக நடைபெறும் செயல்பாடுகள் குறித்த புகைப்படம், காணொலிக் காட்சி, சிறப்பான அறிக்கை வழங்கும் கல்லூரிகளை பாராட்டும் வகையில் ஆட்சியர் மூலம் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாகவும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai