சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியை அடுத்த அரசூரில் உள்ள எல்லை அம்மன், சௌந்தரவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கும்மிடிப்பூண்டியை அடுத்த அரசூர் பகுதியில் சௌந்தரவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில், சிறப்பு யாகங்கள், கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், அபிஷேக -ஆராதனைகள் நடைபெற்றன. 
  இதையடுத்து, வியாழக்கிழமை நான்காம் கால யாக பூஜை, கலசப் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. 
  தொடர்ந்து, புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க கோயில் ராஜகோபுரத்தில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.  விழாவில், கும்மிடிப்பூண்டி, சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலர் ஆர்.பொற்செல்வி ஞானப்பிரகாசம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai