குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும்

குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும் என பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.


குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும் என பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
 திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இங்கு பீரகுப்பம், மத்தூர், மேல்கசவராஜப்பேட்டை ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உருவாகி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
 இதைத் தடுப்பதற்காக பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் சிறப்பு முகாம்களை நடத்தியும், நிலவேம்புக் குடிநீர் கொடுத்தும், கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் கூறுகையில், தற்போது மழைக் காலம் என்பதால், குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும்.
 மேலும், அனைவரும் நன்கு காய்ச்சிய பின் குடிநீரை அருந்த வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 இதுதவிர காய்ச்சல் வந்தவுடன் அந்த பகுதிக்கு சென்று மருத்துவ முகாம் நடத்தியும், 20 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் சுழற்சி முறையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com