Enable Javscript for better performance
சத்தான உணவு உட்கொண்டால் ரத்தசோகையைக் கட்டுப்படுத்தலாம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர்- Dinamani

சுடச்சுட

    

    சத்தான உணவு உட்கொண்டால் ரத்தசோகையைக் கட்டுப்படுத்தலாம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர்

    By DIN  |   Published on : 14th September 2019 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    சத்தான உணவு உட்கொண்டால் ரத்தசோகையைக் கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகநாயகி தெரிவித்தார்.
    வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகநாயகி பேசியது: 
    ரத்தத்தில் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறைதலே ரத்த சோகை ஏற்படுகிறது. பொதுவாக, ஆண்களுக்கு 15.5 முதல் 16.05 கிராமாக இருக்க வேண்டும். 13 கிராமுக்கும் கீழ் குறைவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. பெண்களுக்கு 13.4 முதல் 14.5 கிராம் இருக்க வேண்டும். 12 கிராமுக்கும் கீழ் குறைவதால் ரத்த சோகை ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு 11 கிராமுக்கும், 6 மாதம் முதல் 14 வயது குழந்தைகளுக்கு 12 கிராமுக்கும் கீழ் குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். 
    இதற்கு இரும்புச் சத்து பொருள்கள், தேவையான உணவை உள்கொள்ளாமல் இருப்பது, அதிக ரத்தப்போக்கு, குடற்கொக்கி புழுக்கள், மலேரியா போன்றவற்றால் ரத்த சோகை ஏற்படும். இதனால் எளிதில் சோர்வு, மூச்சு வாங்குதல், வெளிறிய முகம், வெளிறிய நகங்கள் காணப்படுவது இதன் அறிகுறிகள்.
    பேரீச்சம்பழம், பனைவெல்லம், சுண்டைக்காய், காய்கறி, கீரை வகைகள், முளைகட்டிய தானிய வகைகள் போன்றவற்றை உள்கொள்ள வேண்டும். அதேபோல், நாள்தோறும் ஏதாவது ஒரு பயிறு வகை ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவது நல்லது. மீன், கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் ஈரல் ஆகியவற்றை உட்கொள்வதால் ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்றார்
    முன்னதாக ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி மற்றும் பிரசார வாகன பேரணியை அவர் தொடங்கி வைத்தனர்.
    உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீதர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் அருகே நத்தமேடு கிராமத்தில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, சத்தான உணவு வழங்குதல் தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஆசிரியர்கள் சுமலதா, சத்யா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவியாளர்கள் பிரியா, தேன்மொழி, பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சதீஷ் செய்திருந்தார்.
    திருத்தணியில்
    திருத்தணி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஊட்டசத்து உணவு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திவ்யஸ்ரீ தலைமை வகித்தார். திருத்தணி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் ராதிகாதேவி, முதுநிலை பிரசவ மருத்துவர்கள் ஹேமாவதி, கங்கா ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கினர். 
    தொடர்ந்து,  மருத்துவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
    முகாமையொட்டி, ஊட்டச்சத்தான உணவுகள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டு, கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு பராம்பரிய உணவு வகைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp