மக்கள் நீதிமன்றத்தில் 1,513 வழக்குகளுக்குத் தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,513 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.13.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. 
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதனிடம் வழக்கு ஆவணங்களை வழங்கிய பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதனிடம் வழக்கு ஆவணங்களை வழங்கிய பொதுமக்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,513 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.13.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. 
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.செல்வநாதன், திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி மெவிஸ் தீபிகா சுந்தரவதனா, மாவட்ட நிரந்தர லோக் அதலாத் தலைவரும், மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான ராம.பார்த்தீபன் ஆகியோர் தலைமை வகித்து தொடக்கி வைத்தனர்.
மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, குடும்ப நலன், காசோலை, குற்றவியல் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் உள்ளிட்ட  3,867 வழக்குகள் சமரச தீர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 700 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதில், ரூ. 11 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 985 இழப்பீடு வழங்கப்பட்டது. 
அதேபோல், நிலுவையில் அல்லாத 4,400 வழக்குகளில் 813 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுஸ ரூ.1 கோடியே 82 லட்சத்து 66 ஆயிரத்து 904 இழப்பீடு வழங்கப்பட்டது. 
அதன்படி மொத்தம் 1,513 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.13 கோடியே 35 லட்சத்து 54 ஆயிரத்து 889 இழப்பீடாக வழங்கப்பட்டது. 
தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஜா, திருவள்ளூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.உமா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுபாசினி, குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர்கள் ராதிகா, இளவரசி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் ஜி.சரஸ்வதி மற்றும் பயிற்சி நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணியில்...
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற திருத்தணி சார்பு நீதிபதி உமா தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 
இதில், மொத்தம் 1,200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 
அவற்றில் 205 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 6, 10 அபராத வழக்குகளுக்கு ரூ. 56, 600, 10 வங்கி வழக்குகளுக்கு ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 500 என மொத்தம், ரூ. 1 கோடியே 89 லட்சத்து 88 ஆயிரத்து 106 இழப்பீடாக வழங்கப்பட்டது.
நீதிமன்ற தலைமை எழுத்தர் ராமமூர்த்தி, மூத்த வழக்குரைஞர்கள் விஜயகுமார், காத்தவராயன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com