அம்மா இரு சக்கர வாகனம் பெற பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரிந்து வரும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரிந்து வரும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீதம் மானியத்தில் பெற வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 தமிழகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் மகளிருக்கு, அவரவர் பணிபுரியும் இடங்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் கடந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. 
இத்திட்டம் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் ஒரு லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2019-20-ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழகத்தில் வசிக்கும் 18 முதல் 40 வயதுக்குள்பட்ட இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்த, ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். தனிநபர் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும். 
இதில் வாகனத்தின் மொத்த மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் இரண்டில் எது குறைவோ அந்தத்  தொகை மானியமாக வழங்கப்படும். மாவட்ட தேர்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகள் 45 நாள்களுக்கு முன்பு வாகனங்களை வாங்கி உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து மானியத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கான விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி   அலுவலகங்களில் மகளிர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். அப்போது, தங்களது வயதுக்கான சான்று மற்றும் பழகுநர் உரிமம் சான்று ஆகியவற்றைக் கட்டாயம் அளிக்க வேண்டும். அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் விலையில்லாமல் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்று பெறப்படும் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலங்களில் மட்டுமே பதிவு எண்ணிடப்பட்டு ஒப்புகை ரசீது ஒவ்வொருவரும் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். 
எனவே, தகுதியான பயனாளிகள் மேற்குறிப்பிட்டுள்ள விவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநகராட்சி, அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com