இதய நோய் குறியீடு: சர்வதேச மாநாடு

மருத்துவர் செரியன் இருதய மருத்துவமனை சார்பில் முதல் சர்வதேச இதய நோய் குறியீடு தரவு சேமிப்பு

மருத்துவர் செரியன் இருதய மருத்துவமனை சார்பில் முதல் சர்வதேச இதய நோய் குறியீடு தரவு சேமிப்பு மாநாடு கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏடூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செரியன் மருத்துவமனை தலைவர் மருத்துவர் கே.எம்.செரியன் தலைமை வகித்துப் பேசியது:
இதய நோய் குறியீடு தரவு சேமிப்பு அணுகல் மற்றும் பகிர்வை செயல்படுத்துவதன் மூலம் தொழில்நுட்பத்தை எளிதாக்கி, சுகாதாரத் துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும், இணைய வழி அறிவு பரிமாற்றம் நடைபெறும்போது, எதிர்காலத்தில் பல உயிர்களைக் காக்க முடியும். இந்தியாவின் அறிவுக் களஞ்சியமாக அக்காலத்தில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் போல இந்த முயற்சி அறிவுக் களஞ்சியமாகத் திகழும் என்றார்.
தொடர்ந்து  மருத்துவர் கே.எம்.செரியன் இதய மருத்துவமனை மற்றும் மியான்மர் நாட்டின் கோல்டன் ஜானேகா பொது நிறுவனத்துடனான இருதய மருத்துவ அறிவியல் பரிமாற்றம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இதில் மியான்மர் நிறுவனத்தின் தலைவர் கியாவ் மைன்ட் நைங் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com