திருத்தணி அரசுக் கல்லூரியின் தொலைதூரக் கல்வியில் சேர செப். 30 கடைசி நாள்

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில், இயங்கி வரும் தொலைதூரக் கல்வி மையத்தில், மாணவர்கள் சேர, இம்மாதம், 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில், இயங்கி வரும் தொலைதூரக் கல்வி மையத்தில், மாணவர்கள் சேர, இம்மாதம், 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி அரசினர் கலைக் கல்லூரியில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி புதிதாக தொலைத்தூரக் கல்வி மையம் திறக்கப்பட்டது. இதில், இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், மாணவர் சேர்க்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில், தற்போது 75 மாணவ-மாணவியர் சேர்ந்துள்ளனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, மாணவர்களின் நலன்கருதி இம்மாதம் 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பித்து, தொலைதூரக் கல்வியில் சேரலாம் என கல்லூரி முதல்வர் சுமதி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com