முதுகலை ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு

முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணிகளுக்கான நேரடி நியமனப் போட்டிக்கான எழுத்துத் தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 20 தேர்வு


முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணிகளுக்கான நேரடி நியமனப் போட்டிக்கான எழுத்துத் தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் இணைய தளம் மூலம் வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில அளவில் 2018-19 -ஆம் ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1-க்கான நேரடி நியமனப் போட்டி எழுத்துத் தேர்வுகள் இணையதளம் மூலம் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய நாள்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை எதிர்கொள்ளும் நோக்கத்தில் எவ்விதமான சிரமம் இல்லாத வகையில் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 
இத்தேர்வுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகளில் மாதிரி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.   இதில் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி-திருவள்ளூர், கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளி-மணவாளநகர், சி.எஸ்.ஐ. கெளடி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி-காமராஜர் நகர்- ஆவடி,    இமாகுலெட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி-ஆவடி, எஸ்.ஆர்.எம். மேல்நிலைப் பள்ளி-அம்பத்தூர் உள்ளிட்ட பள்ளிகளில் மாதிரி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில், தேர்வர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மாதிரி தேர்வு மைய பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.24) மற்றும் வியாழக் கிழமை (செப். 26) ஆகிய நாள்களில் சென்று  ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்து மாதிரி தேர்வுக்கான பயிற்சி பெறலாம். 
அதேபோல், வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வெழுதுவோர் காலை 8.30 மணிக்குள்ளும், பிற்பகல் 1.30 மணிக்குள் கட்டாயம் செல்ல வேண்டும். இத்தேர்வின் போது செல்லிடப்பேசி போன்ற மின்னணுப் பொருள்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com