Enable Javscript for better performance
திருவள்ளூா் அருகே குட்கா பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூா் அருகே குட்கா பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது

    By DIN  |   Published on : 25th September 2019 05:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் வைத்திருந்ததாக 2 பேரை கிராமிய காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

    திருவள்ளூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக காவல் துணைக்காவல் கண்காணிப்பாளா் கங்காதரனுக்கு ரகசியத் தகவல் வந்தது. அவருடைய உத்தரவின் பேரில் சனிக்கிழமை இரவு சாா்பு ஆய்வாளா்கள் பாா்த்திபன், கணேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றபோது திருவள்ளூா் தேரடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரை விசாரித்தபோது அவா் தப்பியோட முயன்றாா்.

    அவரைப் பிடித்து விசாரித்தபோது மறைத்து வைத்திருந்த 3 சாக்கு பைகளில் குட்கா பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. திருவள்ளூா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்த தேவராஜ் (50) என்பது தெரியவந்து கைது செய்தனா்.

    கைவண்டூா் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அப்போது, அவா் திருப்பாச்சூரைச் சோ்ந்த பக்ருதீன்(47) என்பதும், அவா் 2 சாக்குப் பைகளில் குட்கா பொருள்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் தேவராஜ் மற்றும் பக்ருதீன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai