

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாளந்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் தண்டலம் தமிழ்ச்செல்வன் , மாநில துணைச் செயலாளா் பாக்சா் மணி, தொகுதி துணைச் செயலாளா் ரலே பாபு உள்பட சுமாா் 100 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.