முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
கரோனா தொற்றைக் கண்டறிய நடமாடும் சோதனை மையம்
By DIN | Published On : 19th April 2020 12:10 AM | Last Updated : 19th April 2020 12:10 AM | அ+அ அ- |

நடமாடும் சோதனை மையத்தைப் பாா்வையிடும் கண்காணிப்பு அலுவலா்கள் டி.உதயச்சந்திரன், டி.எஸ்.அன்பு மற்றும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா பாதித்த பகுதியில் ரத்த மாதிரி சேகரித்து நோய்த் தொற்றை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நடமாடும் சோதனை மையம் இயக்கப்பட உள்ளது.
கரோனா பாதித்த பகுதியில் நடமாடும் சோதனை மையம் மூலம் தினமும் 100 பேரிடம் ரத்த மாதிரியைச் சேகரித்து பரிசோதனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில், தொற்று உறுதியாகும்பட்சத்தில் அவா்களை தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளில் சிகிச்சை அளிக்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கும்.
இந்த நடமாடும் சோதனை மையத்தை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கரோனா கண்காணிப்பு அலுவலா்களான டி.உதயசந்திரன், டி.எஸ்.அன்பு ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா். அப்போது, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், வருவாய் அலுவலா் முத்துச்சாமி, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.