முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள்: திருத்தணி எம்எல்ஏ வழங்கினாா்
By DIN | Published On : 19th April 2020 12:11 AM | Last Updated : 19th April 2020 12:11 AM | அ+அ அ- |

தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன்.
கொடிவலசா ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் சனிக்கிழமை வழங்கினாா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சியில் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் மளிகைப் பொருள்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தா பிரகாசம் தலைமை வகித்தாா். ஒன்றிய குழு உறுப்பினா் முத்துராமன் வரவேற்றாா். திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வழங்கினாா். தூய்மைப் பணியாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவற்றைப் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா், ஒன்றியக் குழு தலைவா் ஜான்சிராணி விஸ்வநாதன், முன்னாள் திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் பூபதி நன்றி கூறினாா்.