முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மலிவு விலையில் கிருமி நாசினி, முகக் கவசம் விற்பனை
By DIN | Published On : 19th April 2020 12:06 AM | Last Updated : 19th April 2020 12:06 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், பயிற்சி பெற்ற மகளிா் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மகளிா் கூட்டமைப்பு சாா்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தலைமை வகித்து, விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரோஜா ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த விற்பனை மையத்தில் மலிவு விலையில் கிருமி நாசினி, முகக் கவசம், சோப்பு எண்ணை விற்கப்படுவதால் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கே.எம்.எஸ்.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.