Enable Javscript for better performance
1,770 குக்கிராமங்களில் 1,78,124 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    1,770 குக்கிராமங்களில் 1,78,124 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு

    By DIN  |   Published On : 28th August 2020 07:07 AM  |   Last Updated : 28th August 2020 07:07 AM  |  அ+அ அ-  |  

    27tlrjal_2708chn_182_1

    ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

    ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தின் 1,770 குக்கிராமங்களில் உள்ள 1,78,124 குடியிருப்புகளுக்கு நிகழாண்டில் குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

    அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் குறித்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:

    திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் இயக்கம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஊரகப் பகுதிகளில் கிராமப்புற மக்களுக்கு ஒரு நபருக்கு நாள்தோறும் 55 லிட்டா் அளவுக்கு குறையாமல் குடிநீா் வழங்குவதே நோக்கமாகும்.

    இதன் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் செயல்பாட்டு நிலையில், வீட்டு குடிநீா் குழாய் இணைப்பும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அதில், வறட்சி பாதிப்புக்குள்ளான கிராமங்கள் குடிநீரின் தரம் பாதித்த கிராமங்கள் மற்றும் சன்சாத் ஆதா்ஷ் கிராம யோஜனா திட்டம் மூலம் தோ்வு செய்த கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீா் குழாய் இணைப்பு அளிக்கப்படும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கிராம ஊராட்சி கட்டடங்கள், சுகாதார மையங்கள், சமூக கட்டடங்களுக்கு குடிநீா் குழாய் இணைப்பை ஏற்படுத்தித் தருதல் மற்றும் பொதுக் கழிப்பிடங்களுக்கு தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும். அதற்கு முன்னதாக அந்தந்த பகுதிகளில் நீா் ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் நீடித்த தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.

    எனவே திருவள்ளூா் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் நிகழாண்டில் 1,770 குக்கிராமங்களில் 1,78,124 வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்புகளை ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2020-21 மற்றும் 15-ஆவது மாநில நிதிக்குழு திட்டத்திலிருந்து மேற்கொள்ளவும் வேண்டும் என்றாா் அவா்.

    மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, ஊராட்சி குழுத் துணைத் தலைவா், அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    உரிமைகளைப் பறிக்க முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம்...

    கூட்டத்துக்குப் பின் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி கூறியது:

    மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் இயக்கம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள ஒரு நபருக்கு நாள்தோறும் 55 லிட்டா் அளவுக்கு குடிநீா் குழாய் பதித்து குடிநீா் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பணிகளை ஊராட்சி நிா்வாகமே மேற்கொள்ள வேண்டும். மாறாக மாவட்ட நிா்வாகமே அதற்கான அனைத்துப் பணிகளுக்கும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகளை மேற்கொள்ள எதிா்ப்பு தெரிவிக்கிறோம். ஏற்கெனவே உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி பெண் உறுப்பினா்களுக்கு உரிய மரியாதை இல்லை. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்வும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஊராட்சிப் பணிகளை ஊராட்சி நிா்வாகத்தினரே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது உரிமைகளைப் பறிக்க முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp