கும்மிடிப்பூண்டியில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு 

கும்மிடிப்பூண்டியில் 94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் காணொலி மூலம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது.
சார்பதிவாளர் அலுவலகம்.
சார்பதிவாளர் அலுவலகம்.

கும்மிடிப்பூண்டியில் 94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் காணொலி மூலம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் சார் பதிவாளர் அலுவலம் வாடகை கட்டடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலம் அருகில் பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் 94 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்ட அரசு திட்ட ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு பூஜை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகிகள் டி.சி.மகேந்திரன், இமையம் மனோஜ், எம்.எஸ்.எஸ்.சரவணன், ஓடை ராஜேந்திரன், சுகுமாறன், பெத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் ஜீவா செல்வம், எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி தலைவர் ரேணுகா முரளி, கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவர் சதீஷ், பெத்திக்குப்பம் ஒன்றிய கவுன்சிலர் சங்கர், எஸ்.ஆர்.கண்டிகை ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், முன்னாள் மாணவர் அணி செயலாளர் முல்லைவேந்தன், எகுமதுரை ஊராட்சி முன்னாள் தலைவர் மஸ்தான், ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் குறித்த காலத்துக்கு முன்பேயே இந்த கட்டிடத்தை மிகவும் வடிவமைப்பில் சிறப்பான வடிவமைப்பில் கட்டிய ஒப்பந்ததாரர் எகுமது ரை டி.சி.மகேந்திரனை பாராட்டி கௌரவித்தார். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் டேவிட்குமார்,  ராஜா, ஜோதி ராமலிங்கம், தமிழ்வாணன், புருஷோத், நிர்மல், எஸ்.ஆர்.ராஜா, லட்சுமி, சுசிலா , சார் பதிவாளர்(பொறுப்பு) செந்தில்குமார், உதவியாளர் கலா , அலுவலக உதவியாளர் காந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com