ஆரணி ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை

மாளந்துர்  பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தரக்கோரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாளந்துர்  பகுதி மக்கள்.
மாளந்துர்  பகுதி மக்கள்.

மாளந்துர்  பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தரக்கோரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் மாளந்துர் கிராமத்தில் சுமார் 2,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றி ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் மக்களும் ஆரணி ஆற்றின் இடையே மண் பாதையில் கடந்து ஊத்துக்கோட்டை பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக சென்று வருவார்கள். இதுதவிர மாளந்துர் கிராமப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் சுமார் 500 ஏக்கர் ஆற்றின் அக்கறை பகுதியில் இருப்பதாகவும் அங்கு காய்கனிகள் நெற்பயிர் பூக்கள் உள்ளிட்ட வகையான பயிர்களை பயிரிட்டு வருவதாகவும் அக்கறைக்கு செல்வதற்கு ஆரணி ஆற்றின் கடந்துதான் விவசாயம் செய்து வருவதாகவும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் விளைவிக்கின்ற பூக்கள் பழங்களை உள்ளிட்டவை பறிக்க சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்றுதான் அறுவடை செய்து உரிய காலங்களில் எடுத்து சென்று வியாபாரம் செய்ய முடியவில்லைை என்றும் இதனால் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றோம்் என்றும் மேலும் ஆரணி ஆற்றின் மீது தரைப்பாலம் அமைத்து கொடுத்தால் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் எங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொள்ள இந்த ஆற்றின் இடையே பாலம் அமைத்து கொடுத்தால் நாங்கள் அருகே உள்ள பெரியபாளையம் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, கால்நடை மருத்துவமனை, உயர்நிலைப் பள்ளி, பதிவுத்துறை, தபால் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்றும் இல்லையெனில் மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது சுமார் 15 கி.மீ., தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் ஆரணி ஆற்றின் மீது தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com