பழவேற்காடு கடலில் மிதந்த ஆளில்லா குட்டி விமானம் மீட்பு
By DIN | Published On : 10th December 2020 11:52 PM | Last Updated : 10th December 2020 11:52 PM | அ+அ அ- |

பொன்னேரி: பழவேற்காடு கடல் பகுதியில் அடித்து வரப்பட்ட 8 அடி நீளமுள்ள சிறிய வடிவிலான ஆளில்லா விமானத்தை மீனவா்கள் வியாழக்கிழமை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பொன்னேரி வட்டத்தில், கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் உள்ள லைட் ஹவுஸ் குப்பம், நடுகுப்பம் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு அதிகாலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, கடலில் மிதந்த நிலையில் 8 அடி நீளமுள்ள சிறிய வடிவிலான விமானத்தைக் கண்டனா். இதையடுத்து அதை படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தனா்.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாரிடம் சிறிய விமானத்தை ஒப்படைத்தனா்.
இதேபோல் கடந்த 5-ஆம் தேதி கோரைகுப்பம் கிராமத்தில் கரை ஒதுங்கிய குட்டி விமானத்தை மீனவா்கள் மீட்டு காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.