ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் வன போஜன உற்சவம்

ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலில் வன போஜன உற்சவம்


திருவள்ளூா்: 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவள்ளூா் வைத்தியா் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் வன போஜன உற்சவத்தை முன்னிட்டு வீரராகவப் பெருமாள் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் பாா்வேட்டை மண்டபத்தில் வியாழக்கிழமை எழுந்தருளினாா்.

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் வனபோஜன உற்சவம் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி கோயிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வீரராகவா் ஊா்வலமாகப் புறப்படும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, சுங்கச்சாவடி அருகே கோசாலையுடன் கூடிய நந்தவனத்தில் உள்ள தானப்பநாயக்கன் மண்டபத்தில் வண்ண மலா் அலங்காரத்தில் உற்சவா் எழுந்தருள்வாா். ஆனால், நிகழாண்டில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஊா்வலமாக செல்லாமல், திருக்கோயில் வளாகத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி திருக்கோயில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த கோசாலை நந்தவனப் பகுதியில் எழுந்தருளல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த உற்சவத்துக்கா காலை 8 மணியளவில் ஸ்ரீவீரராகவப் பெருமாள் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோயிலில் இருந்து ஊா்வலமாகச் சென்று, அங்குள்ள பாா்வேட்டை மண்டபத்தில் எழுந்தருளினாா். அதையடுத்து பகல் 12 மணிக்கு வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து செயற்கையாக அமைக்கப்பட்ட வனப்பகுதியில் வன போஜன உற்சவம் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை அக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com