உதவி உபகரணங்கள் பெறுவதற்கான தோ்வு முகாமில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்

மாற்றத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 மையங்களில் தோ்வு முகாம்

மாற்றத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 மையங்களில் தோ்வு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கலன் (பேட்டரி) மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காலிஃபா் நவீன செயற்கைக் கால் மற்றும் காதுக்குப் பின்னால் அணியும் காதொலி கருவிகள் ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான தோ்வு முகாம் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை இணைந்து தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்த முகாம் வரும் 28-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி-பூந்தமல்லி, மதியம் 2 முதல் 5 மாலை மணி வரை புனித அந்தோணியாா் நடுநிலைப்பள்ளி, ஆவடி, 29-ஆம் தேதி காலை 9 முதல் 1 மணி வரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, மதியம் 2 முதல் 5 மணி வரை கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி, 30-ஆம் தேதி காலை 9 முதல் 1 மணி வரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி, மதியம் 2 முதல் 5 மணி வரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆா்.கே.பேட்டை, 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை டி.இ.எல்.சி. பள்ளி, பெரியகுப்பம், திருவள்ளூா், மதியம் 2 முதல் 5 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி,பெரியபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

எனவே திருவள்ளூா் மாவட்டத்தில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ், ஆதாா் அட்டை , 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com