திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் நாளை சொா்க்கவாசல் திறப்பு

வைத்திய வீரராகவா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொா்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வில் கரோனா பரவல் தடுப்புக்காக அதிகாலையில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என

திருவள்ளூா்: வைத்திய வீரராகவா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொா்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வில் கரோனா பரவல் தடுப்புக்காக அதிகாலையில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் இவ்விழா கடந்த 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொா்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (டிச. 25) அதிகாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

வீரராகவப் பெருமாள் தனது மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு சொா்க்கவாசலைக் கடந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

கரோனா பரவல் தடுப்பு காரணமாக, அன்று அதிகாலை 4 மணி முதல் 6.30 மணி வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. பூஜைகள் முடிந்த பின்னா் காலை 6.30 மணி முதல் பொது முடக்க விதிகளுக்குட்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். எனினும், பக்தா்கள் அா்ச்சனைப் பொருள்களைக் கொண்டு வர அனுமதியில்லை.

சொா்க்கவாசல் திறப்பு தினமான வெள்ளிக்கிழமை முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com