ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தில் நாளை முதல் வாகனங்கள் செல்ல அனுமதி

ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தில் நாளை முதல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம்.
ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம்.

ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு புரவி புயலால் பெய்த மழையால் உடைந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக தற்காலிக தரைப்பாலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் மட்டும் செல்ல அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் கடந்த 2015-இல் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது. இதனால் திருவள்ளூர், ஆந்திரத்துக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டதால், 2018-இல் 28 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தற்காலிக தரைப்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்துக்கு பயன்பட்டுக்கு வந்தது. இந்த நிலையில், புரவி புயல் காரணமாக பெய்த மழை மற்றும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி தற்காலிக தரைப்பாலம் உடைந்தது.

இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 40 கி.மீ. தூரம் சென்று திருவள்ளூர், ஆந்திரத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. உயர்மட்ட மேம்பாலமும் கட்டி முடிக்கப்படாததால், ஆபத்தான முறையில் பொது மக்கள் பயணத்தை தற்போது உயர்மட்ட மேம்பாலத்தின் அருகே தற்காலிகமாக மண் கொட்டி தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 200 கன அடியாக குறைந்து வருவதால், தற்காலிக தரைப்பாலத்தில் குழாய்கள் பதித்து தரைப்பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இதில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார் ஆகியவை மட்டுமே நாளை முதல் அனுமதிக்கப்பட உள்ளன. கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படாது என நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உடைந்த தரைப்பாலம் ஒரு வாரத்தில் முழுவதுமாக சீரமைக்கப்பட்ட உடன் முழுமையான போக்குவரத்து தொடங்கும் எனவும் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com