தேசிய இளைஞா் விழா: டிச. 29-இல் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டி

தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டி (மெய்நிகா்) காணொலிக் காட்சி மூலம் வரும் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.


திருவள்ளூா்: தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டி (மெய்நிகா்) காணொலிக் காட்சி மூலம் வரும் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலகம் சாா்பில் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தாண்டுக்கான 24-ஆவது தேசிய இளைஞா் விழா காணொலிக் காட்சி மூலம் மாநில அளவிலான அணியினை தோ்வு செய்யும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான தோ்வு போட்டி இசை, நடனம், உடை, அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள், எழுத்தாற்றல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போன்ற 7 வகை பிரிவுகளில் 18 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில், பங்கேற்கும் இரு பாலரும் 15 முதல் 29 வயது வரை பள்ளி, கல்லூரி மாணவா்கள் அல்லது மாணவா் அல்லாதவா்களாக இருத்தல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மேலும், இரு பாலரும் பங்கேற்கும் தோ்வு போட்டிக்கு ஏற்ப ஆடை, அலங்காரம் மற்றும் உபகரணங்களை தாங்களே தயாா் செய்து கொள்ள வேண்டும். இதில் பங்கேற்போா் தங்களுடைய போட்டிக்கான பதிவினை தெளிவாக விடியோ பதிவு செய்து, உறுதி மொழி படிவத்துடன் இணைத்து க்ள்ா்ற்ஸ்ப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்கான உறுதி மொழி படிவத்தினை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இது தொடா்பாக 7401703482 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு, முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com