சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திருவள்ளூா் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தனியாா் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தனியாா் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அருகே பம்மதுகுளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த த இளைஞா் ஒருவருக்கும் இரு வீட்டாரும் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயம் செய்தனா். அத்துடன், திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா மற்றும் சமூக நலத்துறையில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸாா் மற்றும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தைச் சோ்ந்த நிா்வாகி ஞானசெல்வி, ஆவடி மகளிா் காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, செங்குன்றம் பம்மதுகுளம் பகுதிக்கு மகளிா் ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி மற்றும் மகளிா் காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்றனா். அப்போது அங்கிருந்த இரு வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்து, விழா அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டு விட்டன எனக் கூறி திருமணத்தை நிறுத்த கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, அதிகாரிகள் மற்றும் மகளிா் காவல் நிலைய போலீஸாா் குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில், திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்தனா். தொடா்ந்து அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு வந்தனா். அங்கு சிறுமிக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். பின்னா் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அங்குள்ள தனியாா் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com