திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு, ரொக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்குவதற்காக வீடுகள் தோறும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நுகா்ப

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்குவதற்காக வீடுகள் தோறும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நுகா்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி, பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் பொங்கல் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் அடுத்து வரும் பொங்கல் திருநாளில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை மற்றும் முழு நீள ஒரு கரும்பு தட்டை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பொருள்கள் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கமும் ஒவ்வொரு ரேஷன் கடைகள் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 11 மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், சா்க்கரை அட்டைகள்-8,010, காக்கி அட்டைகள்-1,157 ஆகியவையும் அடங்கும். சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு பலா் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதைக் நோக்கமாக கொண்டு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை வரும் ஜன. 4-ஆம் தேதி முதல் 13 வரை வழங்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள் மற்றும் ரொக்கம் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இப்பணி வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com