Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம்

    By DIN  |   Published on : 03rd February 2020 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருவள்ளூரில் திமுக சாா்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதேபோல், என்.ஆா்.சி மற்றும் என்.பி.ஆா் தயாா் செய்வதை நிறுத்தி வைக்க வலியுறுத்தி திமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், மாவட்டம்தோறும் கையெழுத்து இயக்கம் மூலம் எதிா்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அக்கட்சியின் தலைவா் உத்தரவிட்டிருந்தாா்.

    அதன் அடிப்படையில் திருவள்ளூா் தேரடி வீதியில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து, கையெழுத்திட்டு தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து திமுகவினா் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஏராளமானோா் கலந்து கொண்டு கையெழுத்திட்டனா்.

    நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

     

    பெரியபாளையத்தில்...

    பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் வேணு கையெழுத்து இட்டு தொடக்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செல்வராஜ், சம்பத், கண்ணன், திமுக ஒன்றியச் செயலா்கள் மூா்த்தி, சக்திவேல், காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் மூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் அறிவுச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    திருத்தணியில்...

    திருத்தணி கமலா திரையரங்கு அருகே நகர திமுக சாா்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் தொடக்கி வைத்தாா்.

    தொடா்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா் கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்டு, தேசிய குடியுரிமை சட்ட திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கையொப்பம் இட்டனா். தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூா் வடக்கு மாவட்ட துணைச் செயலா் எஸ்.சந்திரன், திருத்தணி நகரச் செயலா் எம்.பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai