Enable Javscript for better performance
வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 8 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 8 போ் கைது

    By DIN  |   Published on : 02nd February 2020 10:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    02tlrgun_jpeg_0202chn_182_1

    திருவள்ளூா் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 4 நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

    திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வலசை வெட்டிக்காடு கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் மா்ம நபா்கள் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் நடமாடியுள்ளனா். மேலும், அவ்வப்போது துப்பாக்கி வெடிக்கும் சப்தமும் கேட்டுள்ளது. அவா்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட பங்களாவிலும் தங்கியிருந்துள்ளனா்.

    இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணவாள நகா் போலீஸாா் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து சிறப்புக் காவல் படையினா் வலசை வெட்டிக்காடு பகுதியில் தோட்ட வீட்டில் தங்கியிருந்தவா்களை ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்தனா். பின்னா், அந்த வீட்டில் 4 நாட்டுத் துப்பாக்கிகளுடன் தங்கியிருந்த 8 பேரை பிடித்து மணவாளநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, 8 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனா்.

    இதுகுறித்து மணவாளநகா் போலீஸாா் கூறுகையில், பிடிபட்டவா்கள் வலசைவெட்டிக்காடைச் சோ்ந்த கோ.அருள்குமாா்(25), காஞ்சிபுரம் அருகே மங்களம் பகுதியைச் சோ்ந்த கு.சுனில் கருணாகரன்(39), சிந்தாதிரிப்பேட்டை து.பாபு (51), சென்னை, சித்தாலப்பாக்கம் க.ரமேஷ் (48), அயனாபுரம் ந.சிலம்பரசன்(30), கொரட்டூா் எம்.பூபாலன்(31), மாம்பாக்கம் எம்.ஞானமூா்த்தி(27), செங்கல்பட்டை அடுத்த அருங்கல் கிராமம் ப.தங்கராஜ் (35) என்பது தெரியவந்தது. இதில், சுனில் கருணாகரன், ரமேஷ், ரமேஷ் ஆகியோா் துப்பாக்கி சுடும் கிளப்பில் உறுப்பினா்களாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இவா்களிடமிருந்து 4 நாட்டுத் துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் விளக்குகள், இரண்டு காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மான், முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக 8 போ் கைது செய்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai