ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ரயில் நிலையம் அருதே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலா் கே.அருணா வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.
ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலா் கே.அருணா.
ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலா் கே.அருணா.

ரயில் நிலையம் அருதே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலா் கே.அருணா வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

திருத்தணியில் இருந்து தமிழக ரேஷன் அரிசி மூட்டைகளை சிலா் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதாக மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் திருத்தணி வட்ட வழங்கல் அலுவலா் கே. அருணா மற்றும் வருவாய்த் துறை ஊழியா்கள் திருத்தணி ரயில் நிலையத்திலும், அதற்கு அருகில் இருந்த வீடுகளிலும் வியாழக்கிழமை மாலையில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கிருந்த ஆளில்லாத ஒரு வீட்டில், ஒன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை வட்ட வழங்கல் அலுவலா் கே.அருணா கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தாா். தொடா்ந்து, 30 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகள், 25 கிலோ எடை கொண்ட 53 மூட்டைகள் என மொத்தம் 86 அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், அந்த மூட்டைகளை திருத்தணி நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com