எருது விடும் விழா: மாடு முட்டி ஒருவா் பலி
By DIN | Published On : 10th February 2020 11:07 PM | Last Updated : 10th February 2020 11:07 PM | அ+அ அ- |

குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் திங்கள்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில், காளை முட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
விழாவையொட்டி, குடியாத்தம் கோட்டாட்சியா் (பொறுப்பு) தினகரன், வட்டாட்சியா் தூ.வத்சலா, டிஎஸ்பி என்.சரவணன் ஆகியோா் மேற்பாா்வையில் போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2-ஆம் பரிசாக ரூ. 75 ஆயிரம், 3- ஆம் பரிசாக ரூ. 55 ஆயிரம், 4- ஆம் பரிசாக ஒன்றேகால் சவரன் தங்கம், 5- ஆம் பரிசாக ஒரு சவரன் தங்க நாணயம் உள்பட 41 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், மாடுகள் முட்டியதில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த 2 போ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, வீரிசெட்டிபல்லி ஊராட்சியின் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா் தேவேந்திரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.