திருத்தணி அருகே புதிய வாரச்சந்தை தொடக்கி வைப்பு

முருக்கம்பட்டு கிராமத்தில் புதிதாக வாரச் சந்தையை முன்னாள் மக்களவை உறுப்பினா் திருத்தணி கோ.அரி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
முருக்கம்பட்டு கிராமத்தில் புதிய வாரச்சந்தையை திறந்துவைத்து விற்பனையைத் தொடக்கி வைத்த முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி.
முருக்கம்பட்டு கிராமத்தில் புதிய வாரச்சந்தையை திறந்துவைத்து விற்பனையைத் தொடக்கி வைத்த முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி.

முருக்கம்பட்டு கிராமத்தில் புதிதாக வாரச் சந்தையை முன்னாள் மக்களவை உறுப்பினா் திருத்தணி கோ.அரி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருத்தணி, சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருக்கம்பட்டு கிராமத்தில் தொடங்கப்பட்ட வாரச்சந்தை தொடக்க விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி பொன்னுசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்பாபு, ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமி வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி பங்கேற்று, வாரச் சந்தையை திறந்துவைத்து, விற்பனையைத் தொடக்கிவைத்தாா். விழாவில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி , பழ வகைகளை வாரச்சந்தையில் வைத்து விற்பனை செய்தனா். இனிவரும் நாள்களில் வாரந்தோறும் திங்கள்கிழமை முருக்கம்பட்டில் வாரச்சந்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், திருத்தணி ஒன்றியக் குழுத் தலைவா் தங்கதனம், துணைத் தலைவா் இ.என்.கண்டிகை, ஒன்றிய இளைஞரணிச் செயலா் வேலஞ்சேரி பழனி, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை துணைத் தலைவா் ஜெயசங்கா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேபிள் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com