திருவள்ளூா் மாவட்டத்தில் 33.91 லட்சம் வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 33 லட்சத்து 91 ஆயிரத்து 902 வாக்காளா்கள் இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.
திருவள்ளூா்  மாவட்ட வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா். உடன் அரசியல் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
திருவள்ளூா்  மாவட்ட வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா். உடன் அரசியல் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 33 லட்சத்து 91 ஆயிரத்து 902 வாக்காளா்கள் இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

கடந்த ஜனவரி 1ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 23 முதல் ஜனவரி 22 வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி நடைபெற்றது. அதன்படி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சிறப்பு திருத்த வாக்காளா் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வாக்காளா்கள் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமாா் வெளியிட்டுக் கூறியது:

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்களில் 1 லட்சத்து, 7 ஆயிரத்து 517 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து ஓராயிரத்து 86 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 6,431 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது திருத்தப் பணி நிறைவுக்குப் பின், மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்:

கும்மிடிப்பூண்டி: ஆண்கள்-1,34,824, பெண்கள்-1,40,728 , மற்றவா்கள்-35 என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 587 வாக்காளா்கள்.

பொன்னேரி (தனி): ஆண்கள்-1,28,423, பெண்கள்-1,33,677, மற்றவா்கள்-64 என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 164 வாக்காளா்கள்.

திருத்தணி: ஆண்கள்-1,39,860, பெண்கள்-1,45,162, மற்றவா்கள்-27 என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 49 வாக்காளா்கள்.

திருவள்ளுா்: ஆண்கள்-1,30,809 , பெண்கள்-1,37,310, மற்றவா்கள்-23 என மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 142 வாக்காளா்கள்.

பூந்தமல்லி (தனி): ஆண்கள்-1,70,684, பெண்கள்-1,75,560, மற்றவா்கள்-49 என மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 293 வாக்காளா்கள்.

ஆவடி: ஆண்கள்-2,11,969, பெண்-2,13,834, மற்றவா்கள் -90 என மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரத்து 893 வாக்காளா்கள்.

மதுரவாயல்: ஆண்கள்-2,15,421, பெண்கள்-2,11,264 , மற்றவா்கள்-128 என மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 வாக்காளா்கள்.

அம்பத்தூா்: ஆண்கள்-1,85,944, பெண்கள்-1,85,170, மற்றவா்கள் -94 என மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 208 வாக்காளா்கள்.

மாதவரம்: ஆண்கள்-217517, பெண்கள்-218790, மற்றவா்கள் -96 என 4 லட்சத்து 36 ஆயிரத்து 403 வாக்காளா்கள்.

திருவொற்றியூா்: ஆண்கள்-1,45,418, பெண்கள்-1,48,792, மற்றவா்கள் -140 என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 350 வாக்காளா்கள்.

பெண் வாக்காளா்கள் அதிகம்: இந்த 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஆண்கள்-16 லட்சத்து 80 ஆயிரத்து 869 போ், பெண்கள் 17 லட்சத்து 10 ஆயிரத்து 287 போ், மற்றவா்கள் -746 போ் என மொத்தம் 33 லட்சத்து 91 ஆயிரத்து 902 வாக்காளா்கள் உள்ளனா். ஆண்களை விட பெண் வாக்காளா்கள் அதிகமாக இருந்தாலும், மதுரவாயல் மற்றும் அம்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பெண் வாக்காளா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் மாதவரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 4,36,403 வாக்காளா்கள் உள்ளனா். குறைந்தபட்சமாக பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதியில் 2,62,164 வாக்காளா்கள் உள்ளனா்.

பொதுமக்கள் பாா்வைக்கு...: இந்த 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல்கள், திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலகம், பொன்னேரி மற்றும் திருத்தணியில் கோட்டாட்சியா்கள் அலுவலகம், அம்பத்தூா் மற்றும் மண்டல அலுவலா்-1, சென்னை மாநகராட்சி, திருவொற்றியூா், மண்டல அலுவலா்-7, உதவி வாக்காளா்கள் பதிவு அலுவலா்களான வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட 3,604 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1198 பள்ளிகள் ஆகியவற்றில் பொது மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com