வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவங்களை அளிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்தோா் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தப்பணிகள் மேற்கொள்ளவும் அதற்கான படிவங்களை அனைத்து வேலை நாள்களிலும் அளிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்தோா் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தப்பணிகள் மேற்கொள்ளவும் அதற்கான படிவங்களை அனைத்து வேலை நாள்களிலும் அளிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1-1-2020-ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாகச் பெயா் சோ்க்க விரும்பினால் படிவம்-6-ஐப் பூா்த்தி செய்ய வேண்டும். அதேபோல், பெயா் நீக்கம் செய்ய விரும்புவோா் படிவம்-7, வாக்காளா் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகளை சரிசெய்யவும், முகவரி மாற்றவும் விரும்புவோா் படிவம்-8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு முகவரி மாற்றிப் பதிவு செய்ய விரும்புவோா் படிவம்-8ஏ ஆகியவற்றைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

இந்தப் படிவங்களை, வரும் 14-ஆம் தேதி முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் அளிக்கலாம். பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களுடன் படிவங்களை அளிப்பது அவசியம். மேலும்,செயலி மூலமாகவும் உரிய விவரங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com