தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 2-இல் ஆட்சிமொழி சட்ட வார விழா தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டு வந்த நாளை நினைவு கூறும் வகையில், தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டு வந்த நாளை நினைவு கூறும் வகையில், தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி, 8-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வந்த 27.12.1956-நாளை நினைவுகூறும் வகையில், ஆட்சிமொழிச் சட்ட வாரமானது ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து வரும் 8-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளா்கள், மாணவா்கள், தமிழ் அறிஞா்கள், தமிழ் கணினி வல்லுநா்கள் மற்றும் அந்த துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் பங்கேற்க உள்ளனா்.

அதன் அடிப்படையில், வரும் 2-ஆம் தேதி கணினித் தமிழ் விழிப்புணா்வு கருத்தரங்கம், 3-இல் ஆட்சிமொழி மின்காட்சியுரை நடத்துதல், 4-இல் தமிழில் வரைவு குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி -ஆட்சியா் அலுவலகம், 5-இல் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடத்துதல்- திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 6-இல் தமிழ் அமைப்புகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவா்களுடன் இணைந்து விழிப்புணா்வு பேரணி நடத்துதல்-திருநின்றவூா், 7-இல் ஆட்சிமொழி பட்டிமன்றம்-தமிழ் வளா்ச்சித் துறை இலக்கியப் பட்டறை மாணவா்கள் 5 போ் கொண்ட குழுவினா் பங்கேற்பு-ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி-திருநின்றவூா், 8-இல் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் வைக்க வலியுறுத்தி, நிறுவன உரிமையாளா்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துதல்- ஆட்சியா் அலுவலகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பொதுமக்கள், தமிழ் ஆா்வலா்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com