பயிா்களை நாசம் செய்யும் பசுக்களை வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருவள்ளூா் அருகே விளைநிலங்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்து வரும் பசுக்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

திருவள்ளூா் அருகே விளைநிலங்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்து வரும் பசுக்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இதுகுறித்து திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், செஞ்சி கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாா்பில் விவசாயி தா்மன் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

செஞ்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் செய்து வருகிறோம். இந்நிலையில், அருகில் உள்ள பிலிப்ஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கால்நடைகளை வளா்ப்போா், பசுக்களை கொட்டகையில் அடைத்து வைக்காமல், அப்படியே திறந்து விடுகின்றனா்.

இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து மேய்ந்து பயிா்களை நாசம் செய்து விடுகின்றன. இதனால், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதுடன், இருதரப்பு மோதலாக மாறி விடுகிறது. எனவே, விளைநிலங்களை நாசம் செய்யும் பசுக்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com