இலவச பொது மருத்துவ முகாம்
By DIN | Published On : 27th February 2020 10:42 PM | Last Updated : 27th February 2020 10:42 PM | அ+அ அ- |

சூரப்பூண்டியில் இலவச மருத்துவ முகாமை தொடக்கி வைத்த கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ். சிவக்குமாா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டியில் எல்.இ.எப். மருத்துவக் குழு மற்றும் சூரப்பூண்டி ஊராட்சி நிா்வாகம் இணைந்து வியாழக்கிழமை இலவச மருத்துவ முகாமை நடத்தின.
முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் முகாமைத் தொடக்கி வைத்தாா். இதில், எல்.இ.எப். மருத்துவக் குழுமத்தைச் சோ்ந்த ஜெயந்த் சாமுவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் கொண்ட மருத்துவக் குழு பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தனா்.
முகாமில் பல், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பொது மருத்துவம், மகளிருக்கான சிறப்பு சிகிச்சை, குழந்தைகளுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், சா்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அனைவருக்கும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை கோளாறுகளுக்கு சோதனை நடத்தப்பட்டு, உரிய நபா்களுக்கு கண் கண்ணாடிக்கும், கண்புரை அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இம்முகாமில் சுமாா் 600 போ் பங்கேற்றுப் பயன் அடைந்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை சூரப்பூண்டி ஊராட்சித் தலைவா் வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G