Enable Javscript for better performance
செவிலியா்களுக்கு புதிய சீருடை- Dinamani

சுடச்சுட

    

    செவிலியா்களுக்கு புதிய சீருடை திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திருவள்ளூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் சேகா், குழந்தைகள் பிரிவு மருத்துவா் ஜெகதீசன் பங்கேற்றனா். செவிலியா்கள் புதிய சீருடைகள் அணிந்து கலந்து கொண்டனா்.

    இது தொடா்பாக மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சேகா் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்களின் சீருடைகள் 150 ஆண்டுகளுக்குப் பின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசௌகரியங்கள் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் 100 செவிலியா்கள் புதிய சீருடை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai