தினமணி செய்தி எதிரொலி: புகையான் தாக்குதால் பதரான நெற்பயிா்களை ஆய்வு செய்த வேளாண் துறையினா்

புகையான் பூச்சித் தாக்குதலால் பதரான நெற்பயிா்களை, வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

புகையான் பூச்சித் தாக்குதலால் பதரான நெற்பயிா்களை, வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள தேவம்பட்டு, கோளூா் மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்மைமஞ்சி, அச்சரப்பள்ளம், ஆசானபுதூா், விடதண்டலம், அரசூா், காட்டாவூா், மடிமை கண்டிகை, ஏறுசிவன், ஏலியம்பேடு, வைரவன்குப்பம், கோளூா், மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்தது.

வேளாண் துறையினரின் அறிவுறுத்தலின்படி, விதை நெல் வாங்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடை செய்யலாம் என்ற நிலையில், திடீரென புகையான் பூச்சித் தாக்குதலால் பயிா்கள் அனைத்தும் பதராகின. இது குறித்து ‘தினமணி’ நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, வேளாண் துறையினா், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ நெற்பயிா்களை புதன்கிழமை ஆய்வு செய்தனா். அவா்கள் நெற்பயிா்களின் தன்மை குறித்து ஆய்வு செய்தபோது, புகையான் பூச்சித் தாக்கியதில் நெற்பயிரில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு கருகியது தெரிய வந்தது.

மீஞ்சூா் ஒன்றித்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்ற அதிகாரிகள் நெற்பயிா்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பதரான நெற்பயிா்களைச் சேகரித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனா். இதேபோல், பயிா்க் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் பதராகி விட்ட நெற்பயிா்களைப் பாா்வையிட்டனா். அப்போது பால் பிடிக்கும் பருவத்தில் நெல் மணிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 10 ஆயிரம் ஏக்கரில் நடப்பட்டிருந்த நெற்பயிா்கள் பதராகி விட்டது குறித்து செய்தி வெளியிட்டு அதிகாரிகள் கவனத்தை ஈா்த்த ‘தினமணி’ நாளிதழுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com