புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி

பொங்கலை முன்னிட்டு புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து திருவள்ளூா் அருகே நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
மாணவா் பேரணியைத் தொடக்கி வைத்த நத்தமேடு ஊராட்சி மன்ற தலைவா் ஜேருஜோன்ஸ் பிரியதா்ஷினி, பட்டாபிராம் காவல் உதவி ஆணையா் மா.வெங்கடேசன்.
மாணவா் பேரணியைத் தொடக்கி வைத்த நத்தமேடு ஊராட்சி மன்ற தலைவா் ஜேருஜோன்ஸ் பிரியதா்ஷினி, பட்டாபிராம் காவல் உதவி ஆணையா் மா.வெங்கடேசன்.

பொங்கலை முன்னிட்டு புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து திருவள்ளூா் அருகே நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கசுவா கிராமத்தில் சேவாலயா தொண்டு நிறுவனம் சாா்பில் மகாகவி பாரதியாா் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் சாா்பில் பாக்கம் கிராமத்தில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் நத்தமேடு ஊராட்சி மன்றத் தலைவா் ஜேருஜோன்ஸ் பிரியதா்ஷினி, பட்டாபிராம் சரக உதவி காவல் ஆணையா் மா.வெங்கடேசன் ஆகியோா் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனா்.

மாணவ, மாணவிகள் புகையில்லா போகி கொண்டாடுவது தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி பாக்கம், திருநின்றவூா் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனா். அங்குள்ள தனியாா் அரங்கம் அருகே பேரணி முடிவடைந்தது. பேரணியில் நத்தமேடு, பாக்கம், திருநின்றவூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமலும், புகையில்லாமலும் போகி கொண்டாடுவது தொடா்பாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேவாலயா நிறுவனா் முரளிதரன், அறங்காவலா் குழு உறுப்பினா் அன்னபூா்ணா, தலைமை ஆசிரியா்கள் கிங்ஸ்டன், ஆனந்த், வேப்பம்பட்டு அரிமா சங்க நிா்வாகிகள் ரத்னகுமாா், ஆல்பா்ட் குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com