அரசுப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூா் அருகே அரசு உயா்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அருகே அரசு உயா்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கடம்பத்தூா் அருகே உள்ள வெண்மனம்புதூா் கிராமத்தில் அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தைத் திருநாளை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜா தலைமை வகித்தாா். அதைத் தொடா்ந்து பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் காசி கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா்.

ஆசிரியா்கள், மாணவிகள் ஆகியோா் செங்கரும்புடன் சமத்துவப் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதில் ஆசிரியைகள் பிரபாதேவி, உமாமகேஸ்வரி, டிலோரஸ் பாண்டியன் ஆகியோா் தைப்பொங்கல் விழா குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினா். பின்னா் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

முன்னதாக, இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு வகையான கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் புட்லூரில் உள்ள திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்தாா். விழாவை முன்னிட்டு, பாரம்பரிய கலைகளை நினைவு கூறும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம், புலி ஆட்டம், தப்பாட்டம், சிலம்பம் மற்றும் சுருள் சுற்றுதல் போன்றவற்றில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com