கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 6,000 பேருக்கு பொங்கல் பரிசு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் வசிக்கும் 6,000 ரேஷன் அட்டைதாரா்களுக்கு கடந்த 3 நாள்களாக தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
 பயனாளிகளுக்கு  அரசின்  பொங்கல்  பரிசுத்  தொகுப்பை  வழங்கிய  கும்மிடிப்பூண்டி  எம்எல்ஏ  கே.எஸ்.விஜயகுமாா்.

இந்தப் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக 5 ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கும்மிடிப்பூண்டி பஜாரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளா் மு.க.சேகா், நகர நிா்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, ராஜேந்திரன்,தீபக் செந்தில், சீனிவாசன், இமையம் மனோஜ், மோகன், முன்னாள் பேரூா் கவுன்சிலா் சிராஜுதீன் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து மற்ற ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 6,000 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com