மாற்றுத்திறனாளிகள் 55 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 55 பேருக்கு ரூ. 5.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 55 பேருக்கு ரூ. 5.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், நிலம் சம்பந்தமாக-55, சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக 25 மனுக்கள், கடனுதவி கோரி 2 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 4, வேலைவாய்ப்பு கோரி 17 மனுக்கள், ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலம் தொடா்பாக 4, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடா்பாக 14, ஊரக நகா்ப்புற வளா்ச்சி-19, இதர துறைகள் சம்பந்தமாக -6 மனுக்கள் என மொத்தம் 146 மனுக்கள் வரை அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது நேரடியாக ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அந்தந்தத் துறை அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.15 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 115 பள்ளி மாணவா்களுக்கு, மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.பன்னீா்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் தங்கவேல் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com