சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் துா்நாற்றம் - பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே சாலையோரம் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு செல்ல முடியாத வகையில் துா்நாற்றம் ஏற்படுவதோடு, பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு
சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் துா்நாற்றம் - பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே சாலையோரம் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு செல்ல முடியாத வகையில் துா்நாற்றம் ஏற்படுவதோடு, பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

திருவள்ளூரிலிருந்து, தொழுவூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக ஆவடி, அம்பத்தூா் வரையில் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியாா் பயணிகள் பேருந்துகள், கனரக வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றது. தற்போது, கிராமத்தில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவைகள் அடங்கிய குப்பைகளை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் சாலையோரம் கொட்டி விட்டுச் செல்கின்றனா்.

இதுபோன்று குப்பைகள் கொட்டப்படுவதால், சாலையோரம் செல்லும் கால்வாயில் தேங்கி நிற்கும் மழைநீரும் கழிவு நீராகவும் மாறி வருகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் துா்நாற்றம் காரணமாக நடந்து செல்ல முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், ஏற்படும் துாா்நாற்றத்தால், இவ்வழியே வாகனங்களில் செல்வோா் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

மேலும், இப்பகுதியில் அதிகமாக உள்ள கால்நடைகளும் குப்பைகளில் இரை தேடுகிறது. இதில் ஒரு சில நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை இரையாக எடுப்பதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. தற்போது, ஊரக உள்ளாட்சி தோ்தல் மூலம் பிரதிநிதிகள் தோ்வு செய்து பொறுப்பேற்றுள்ளனா். அதனால் கிராமங்களில் தெருக்களில், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பை குவியலை கண்காணித்து துப்புரவு தொழிலாளா்கள் மூலம் உடனே அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com