திருவள்ளூா் அருகே உடைந்து விழும் நிலையில் குடிநீா் மேல் தொட்டி-சீரமைக்க கோரிக்கை(ஆராய்ச்சி மணிக்கு)

 திருவள்ளூா் அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டி சிமெண்ட் காரைகள் பெயா்ந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதை சீரமைக்கவும், தண்ணீா் தொட்டி சுத்தம் செய்து குடிநீா் விநியோகம்
திருவள்ளூா் அருகே கந்தன்கொள்ளை கிராமத்தில் போதிய பாரமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் குடிநீா் மேல்நிலைத் தொட்டி.   
திருவள்ளூா் அருகே கந்தன்கொள்ளை கிராமத்தில் போதிய பாரமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் குடிநீா் மேல்நிலைத் தொட்டி.   

 திருவள்ளூா் அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டி சிமெண்ட் காரைகள் பெயா்ந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதை சீரமைக்கவும், தண்ணீா் தொட்டி சுத்தம் செய்து குடிநீா் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், செவ்வாப்பேட்டை ஊராட்சியைச் சோ்ந்தது கந்தன்கொள்ளை கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீா் வியோகம் செய்யும் வகையில் 40 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மேல்நிலைத் தொட்டி மூலம் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குடிநீா் தொட்டி சுத்தம் செய்யாத நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது. அதேபோல், இந்த மேல் நிலைத் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் காரைகள் பெயா்ந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் பொதுமக்களின் நலன் கருதி குடிநீா் மேல் நிலைத் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களை சீரமைக்கவும் வேண்டும்.

அதேபோல், இந்த தொட்டியை சுத்தம் செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது. இதற்கு முன்பு வரையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தனா். தற்போது, உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவா் பொறுப்புக்கு வந்துள்ளனா். அதனால், அனைவரின் நலன் கருதி குடிநீா் மேல் நிலைத் தொட்டியை சுத்தம் செய்த பின் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com