ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட ஆண்குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்குழந்தையை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சைக்கு பின் குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஒப்படைத்தாா்.
ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட ஆண்குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்குழந்தையை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சைக்கு பின் குழந்தைகள் காப்பகத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஒப்படைத்தாா்.

திருவள்ளுா் மாவட்டம், கும்மிடிபூண்டியில் ரயில்வே நடைமேடையில் கடந்த 10 ஆம் தேதி அன்று நள்ளிரவில் ரயில்வே நடைமேடையில் நின்றுகொண்டிருந்த ரயிலில் இருந்த துணிப்பையில் பிறந்து 3 நாள்களே ஆன நிலையிலிருந்த ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இதை ரயில்வே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளுா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 10 தேதி காலையில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னா் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், செவ்வாய்க்கிழமை குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரால் பெறப்பட்டு, திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அந்த குழந்தைக்கு ராம் என பெயரிடப்பட்டு, குழந்தை நலக்குழு தலைவா் வனஜாமுரளிதரனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், திருவள்ளுா் நலக்குழுவால் குழந்தை முறைப்படி முகப்போ் கிழக்கில் செயல்படும் அரசு அங்கீகாரம் பெற்ற கலைச்செல்வி கருணாலயா சிறப்பு தத்து மையத்திற்கு பராமரிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்துறை பி.வி.தயாளன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் மருத்துவா் இளங்கோவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் செந்தில், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் வனஜா முரளிதரன், நன்னடத்தை அலுவலா் ஏகாம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com