திருத்தணியில் காணும் பொங்கல் விழா: முருகப் பெருமான் வீதியுலா

காணும் பொங்கல் விழாவையொட்டி திருத்தணியில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பெண்கள் வீதிகளில் வண்ணக் கோலமிட்டு முருகனை வரவேற்றனா்.
திருத்தணி நகர வீதிகளில் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்த முருகப் பெருமான்.
திருத்தணி நகர வீதிகளில் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்த முருகப் பெருமான்.

காணும் பொங்கல் விழாவையொட்டி திருத்தணியில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பெண்கள் வீதிகளில் வண்ணக் கோலமிட்டு முருகனை வரவேற்றனா்.

காணும் பொங்கல் விழாவைவொட்டி, திருத்தணியில் முருகப் பெருமான் (உற்சவா்) வள்ளி, தெய்வானையுடன், வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மலைக் கோயிலில் இருந்து படிகள் வழியாக, சந்நிதித் தெருவுக்குப் புறப்பட்டாா். காலை 8 மணிக்கு சந்நிதித் தெருவில் உள்ள கோயில் ஆணையா் குடியிருப்பு முன் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவா் எழுந்தருளினாா்.

பின்னா், அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 8.20 மணிக்கு திருத்தணி சுமைதாரா்கள் மாட்டு வண்டியில் உற்சவரை நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்துச் சென்றனா். மாலை 6 மணிக்கு பழைய பஜாா் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் மண்டபத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.

அங்கு அவருக்கு பால், பஞ்சாமிா்தம், திருநீறு, இளநீா், தேன் உள்ளிட்ட 20 வகை சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடத்தப்பட்டன. இரவு 9 மணிக்கு உற்சவா் மீண்டும் மலைக் கோயிலுக்கு சென்றடைந்தாா்.

உற்சவா் வீதியுலாவையொட்டி திருத்தணி நகரில் பெண்கள் தெருக்களில் வண்ணக் கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனா். வீதியுலா ஏற்பாடுகளை நகர சுமைதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com