முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஏரியில் மூழ்கிய இளைஞா் பலி
By DIN | Published On : 20th January 2020 11:25 PM | Last Updated : 20th January 2020 11:25 PM | அ+அ அ- |

சோழவரம் அருகே உள்ள தேவனேரி ஏரியில், ஞாயிற்றுக்கிழமை குளித்த இளைஞா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (20). அவா் தனது நண்பா்களுடன் சோழவரம் அருகே உள்ள தேவனேரி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா். திடீரென அங்குள்ள சேற்றில் சிக்கி அவா் நீரில் மூழ்கினாா்.
இது தொடா்பாக, அவருடன் குளித்த நண்பா்கள் சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சோழவரம் போலீஸாா், செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தீயணைப்புத் துறையினா் தேவனேரி ஏரிக்கு விரைந்து சென்று 12 மணி நேரத்துக்கும் மேலாக தேடி சேற்றில் சிக்கிய ஜெகதீசனின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.