முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
வீரராகவா் கோயிலில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
By DIN | Published On : 20th January 2020 11:24 PM | Last Updated : 20th January 2020 11:24 PM | அ+அ அ- |

திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் 10 நாள்கள் கொண்ட விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாகும். அதேபோல், இந்த விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து காலை 6.30 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவா் வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பின்னா், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதையடுத்து, 22-ஆம் தேதி காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இதேபோல், மூன்றாம் நாளான 23-ம் தேதி காலை கருட கோபுர சேவையும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ஜனவரி 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை தோ்த் திருவிழாவும், 10-ஆவது நாளான 30-ஆம் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கவும் உள்ளாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியா்கள் செய்துள்ளனா்.