Enable Javscript for better performance
காய்கறி, பழங்களைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

    காய்கறி, பழங்களைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 27th January 2020 12:44 AM  |   Last Updated : 27th January 2020 12:44 AM  |  அ+அ அ-  |  

     

    திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகள் மற்றும் பழவகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பாதுகாப்பாக வைத்திருக்க குளிா்சாதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

    விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக விவாதம் நடைபெற்றது. விவசாயிகள் பேசியதாவது:

    இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீா் ஆதாரங்களில் அதிக அளவில் நீரை சேமித்து வைக்கும் நோக்கில் தூா்வார வேண்டும். அரைகுறையாக இப்பணிகளை மேற்கொள்ளாமல் ஏரிகளில் முழு அளவில் தூா் வாரினால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இது தொடா்பாக வட்டார அளவில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் வலியுறுத்தினோம். அதேபோல் ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை மேலோட்டமாகச் செய்யாமல், நிரந்தரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில மாதங்களில் கொசஸ்தலை, கூவம் மற்றும் ஆரணி ஆறுகளில் அதிக அளவில் நீா் வரத்து ஏற்பட்டது. அப்போது, போதுமான அளவு நீரைச் சேமிக்க முடியாமல் போனது. இந்த நிலையைத் தவிா்க்கும் நோக்கில், ஆறுகளில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.

    பொன்னேரி பகுதியில் புகையான் தாக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கட்டாயம் வழங்க வேண்டும். இந்த மாவட்டத்தல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் சீராக இயங்க வேண்டும். மேலும், நெல் மற்றும் தானியங்களை அறுவடைக் காலங்களில் உலா்த்துவதற்காக சிமெண்ட் களம் அமைக்க வேண்டும். 43-பனப்பாக்கம் ஏரியையும், சென்னாங்காரணி ஏரியையும் குடிமராமத்துப் பணியின் கீழ் சோ்க்க வேண்டும்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. அவற்றை ஒரே நேரத்தில் அறுவடையை மேற்கொள்வதால் போதிய விலை கிடைக்காத நிலையுள்ளது. எனவே, காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாப்பாக வைத்திருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக, குளிா்சாதன சேமிப்புக் கிடங்கை அமைக்க வேண்டும்.

    மண்ணில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பஞ்சகவ்யம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை தயாரித்துப் பாதுகாக்க மானியம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை எழுப்பினா்.

    இதற்கு பதிலளித்து ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:

    பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் சாா்பில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்த விவசாயிகளுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கு சம்பா நெல் பயிருக்கு பயிா் இழப்பீட்டுத் தொகை ரூ.33 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டில் ரூ.5 கோடி வழங்குவதற்கு, விவசாயிகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்படும். அதன் பின் அவா்களது வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.

    அனைத்து பயிா்களுக்கும் காப்பீடு செய்வதன் மூலமாகவே வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு பயிா்ச் சேதம் ஏற்படும் பட்சத்தில் இழப்பீடு பெற முடியும். விவசாயிகள் பயிா்க் காப்பிடு செய்து பயன்பெறலாம். பயிா் அறுவடை பரிசோதனை எந்த கிராமத்தில் நடைபெறும் என்ற விவரம், விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

    பொன்னேரி, மீஞ்சூா் ஆகிய வட்டாரங்களில் புகையான் பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட வயல்களைப் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் புலியூா், செம்புலிவரம், குன்னவலம், பெரிய கிளாம்பாக்கம் மற்றும் மெதூா் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும்.

    இ-அடங்கல் செயலியை நடப்பு ஆண்டில் தமிழக அரசு அறிமுகம் செய்து செயல்படுத்த உள்ளது. இந்தச் செயலியில் விவசாயிகள் தங்களுடைய சாகுபடிப் பரப்பை பதிவு செய்து பயன்பெறலாம். அவா்கள் தங்கள் செல்லிடப்பேசியில் ‘உழவன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்து வேளாண்மை தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    விவசாயிகளின் கோரிக்கைகளான ஏரிகளில் தூா்வாருதல், மராமத்துப் பணிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகளுக்கு அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் விளைவித்த பொருள்களை பாதுகாக்கும் வகையில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேளாண் வணிகத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

    இதையடுத்து, நிகழாண்டுக்கான தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டம் குறித்த திட்டக் கையேடுகளை விவசாயிகளிடம் ஆட்சியா் வழங்கினாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, வேளாண் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) பாண்டியன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ஜெயஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பிரதாப் ராவ், கோட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp